திங்கள், 29 பிப்ரவரி, 2016







அலைபேசியில்
உன்னை அழைக்கிறேன்.

நமது மகளை விட்டுப்
பேச வைக்கிறாய்.

புாிந்து விட்டது.

இன்றைக்கும் நீ
யுத்தக் களத்தில்தான்
நிற்கிறாய்.
ஆயுதம் ஏதுமற்ற
நிராயுதபாணியாய்
தவிக்கிறேன்.




வியாழன், 25 பிப்ரவரி, 2016


மதவெறியுடன் 
மண்டியிடுவதுதான் 
தேசபக்தி என்றால் 
நான் தேச விரோதியாகவே 
இருந்துவிட்டுப் போகிறேன்.

புதன், 24 பிப்ரவரி, 2016



பொருக்கு வெடித்த
வெள்ளாமையாய்
தாகத்தோடு யாசிக்கிறேன்.
மேகத்தை வைத்துக்கொண்டு
ரொம்பத்தான் யோசிக்கிறாய்.